ஏக இறைவனின் திருப்பெயரால்.... எமது இனைய தளத்திற்கு வரும் உங்கள் மீது வல்லரஹ்மானின் சாந்தியும் சமாதானமும்
என்றென்றும்
நிலவட்டுமாகுக.

புதன், 12 டிசம்பர், 2012

புகை மனிதனின் பகை.


மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழி முறைகளை இஸ்லாம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது கிடையாது. இன்று நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக புகைப் பிடிக்கும் தீய காரியத்தில் ஈடுபடுவதை நாம் காண் முன்னே கண்டு வருகிறோம்.
புகை பிடிக்கவில்லை என்றால் ஏதோ தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டதாக இவர்கள் நினைக்கிறார்கள். புகைப் பிடிப்பவன் தான் மேலானவன் என்பதைப் போலும் புகை பிடிக்கத் தெரியவில்லை அல்லது பிடிப்பதில்லை என்ற வட்டத்தில் யாராவது இருந்தால் அவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்பதைப் போலும் தான் இந்த சமுதாயம் அவர்களை நோக்குகிறது.
ஆனால் இஸ்லாம் இப்படிப்பட்ட தீய நாகரீகங்களை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் இப்படிக் குறிப்பிடுகிறான்.
உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  (அல்குர்ஆன் 2:195)
புகைத்தல் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மாபாதகச் செயல்பாடாகும்.
இந்தப் புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் ஒவ்வொருவனும் தனது உடல் நலத்தையும் கெடுத்து தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுக வாழ்வையும் நாசப்படுத்துவதைப் பார்க்களாம்.
புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்)வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை,
1. நிகோடின்,
2. கார்பன் டை ஆக்ஸைடு,
3. கார்பன் மோனாக்ஸைடு,
4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும்.
இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை.
புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இருபகுதியில் உள்ள சைனஸ், தொண்டை, பேரிங்ஸ், லாரிங்ஸ், உணவுக்குழாய்,காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செல்லும் சிறு காற்றுக் குழாய்கள், நுரையீரல்,நுரையீரலைச் சுற்றியுள்ள உறை, இரைப்பை, கல்லீரல், சிறு குடல், பெருங்குடல்,கணையம், சிறுநீரகம், ஆண் பெண் உறுப்புக்கள், இதயம், மூளை, கண்கள் ஆகியஉடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட எல்லாஉறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.
பெரிய, சிறிய, நடுத்தர இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகளை நிக்கோடினும், பிற நச்சுப் பொருட்களும் சுருங்கச் செய்து இரத்தக் குழாய்களில்அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் உடல்உறுப்புக்கள் படிப்படியாகச் செயலிழக்கின்றன.
மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோடிட் இரத்தக் குழாய்களும், அதன்கிளைகளும் சுருங்கி மூளையின் செல்களுக்குக் குறைவான இரத்தம் செலுத்தப்படுவதால் பக்க வாதம் ஏற்படுகின்றது.
கண்களுக்கு இரத்தம் அளிக்கும் முக்கியக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டுவிழித்திரை பழுதடைந்து, திடீர் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.
காதுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுவதால் ஆக்ஸிஜன்சப்ளையின்றி கேட்கும் திறன் பாதிக்கப்படுகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 5 மில்லியன்மக்கள் புகைத்தலின் காரணமாக இறந்திருப்பதுடன் அதில் 600,000 மக்கள்இப்புகையிலை புகைகை நுகர்வதனால் உயிர்நீத்துள்ளனர் என்பதுகவலைக்குரியது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்று பொய்த்துஇன்றைய இளைஞர்கள் நாளைய புகைஞர்கள்  எனும் வகையில் 13-18வயதிற்குட்பட்ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7 இல் 1 ஆகஅதிகரித்துள்ளமை நெஞ்சை சுடும் விஷயமாக உள்ளது.
சர்வதேசரீதியில் ஒவ்வொரு 8 செக்கனிற்கும் ஒருவர் புகையிலையால்இறப்பதுடன் இலங்கையில் ஒவ்வொரு 6.5 செக்கனிற்கும் ஒருவர்இறக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20ஆயிரம் பேர் இந்தப் பழக்கத்தால் இறப்பதுடன் நாளொன்றுக்கு 4,101 மில்லியன்புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றன என்பது அதிசயிக்கத்தக்கதன்று.
புகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில்எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும்பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன்குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல்சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாகமூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில்உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கானவினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.
புகையிலையின் புகையில்காணப்படும் காபன் மோனாக்சைட்டு வாயுகுருதியினால் உறிஞ்சப்பட்டுஈமோகுளோபின் உடன்மீளாத்தன்மையாகசேருகின்றது.ஆக்சிஜன்வாயுவிலும் பார்க்க இவ்வாயுவினைத்திறனாக ஈமோகுளோபின்உடன் சேரும். இதனால் குருதியில்ஆக்சிஜன் கடத்தப்படும் அளவுகுறையும்.
இவை ஒரு மனிதனின் உடலில்ஏற்படும் பாதிப்புக்கள் எனும்அதேவேளை இறைவனின் கொடையாகிய சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்துபாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொருவருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும்,ஊடகவியலாளர்களும், தனிநபர்மற்றும்,நிறுவனங்களும்,துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளைமேற்கொண்டு வருகின்றன.
எனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும்என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்குக் காரணம் யார்?  வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளைஉற்பத்தி செய்பவர்களாளா அல்லது ’புண்பட்ட நெஞ்சங்களை புகைவிட்டுஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் மன நோயாளிகளா?
நம்முடைய சிந்தனைகள் இன்னும் அறியாமையில்தான்இருக்கின்றன,அவற்றை நாம் புகையின்றி ஒளி பெறச்செய்ய வேண்டும்.
நமக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் இந்த கொடிய செயல்பாட்டில் இருந்து விடுபட்டு தூய்மையான இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் வாழ்வதற்கு தயாராகுவோம்.

கருத்துகள் இல்லை: