ஏக இறைவனின் திருப்பெயரால்.... எமது இனைய தளத்திற்கு வரும் உங்கள் மீது வல்லரஹ்மானின் சாந்தியும் சமாதானமும்
என்றென்றும்
நிலவட்டுமாகுக.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

வணக்கம்....


ஒருவரையொருவர் சந்திக்கும்போது ''வணக்கம்'' என்ற சொல்லைக் கூறிக்கொள்வது தமிழர்களின் கலாச்சாரம் அல்லது மரபு என்று குறிப்பிடப்படுகின்றது. இந்தக் காலச்சாரத்தைப் பின்பற்றாத முஸ்லிம்களை தமிழர்கள் இல்லை எனவும் சிலர் ஒதுக்கி விடுகின்றனர்.
என்னதான் நியாயப்படுத்தினாலும் வணக்கம் என்ற சொல் வணங்குவதைக் குறிப்பிடும் வார்த்தையாகும். வணக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது ஆதிக்க வர்க்கத்தை நோக்கி வணக்கம் சொல்லும் எளியவன் மிகவும் பணிவுடன் மடித்துக் கட்டிய வேட்டியை அவிழ்த்துவிட்டு தோளில் துண்டு இருந்தால் அதை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு குனிந்து மிக மரியாதையுடன் இருகரம் கூப்பி தாம் செய்யப்போகும் வணக்கத்திற்கு செயல் வடிவம் கொடுத்து ''வணக்கம் எசமான்'' என்று சொல்லுவார். அல்லது ''கும்பிட்றேன் சாமி'' என்று சொல்லுவார்.
கடவுள் நம்பிக்கை கொண்ட ஆன்மீகவாதி பயபக்தியுடன் கோயில்களில் கடவுளைக் கும்பிடும்போது ஏற்படும் அதே பணிவும் கைகளைத் தூக்கி வணங்குவதும், ஓர் எளியவர் ஆதிக்க வர்க்கத்தை நோக்கி வணக்கம் சொல்லும் போதும் இருக்கும். இது வணக்கம் என்ற சொல்லுக்கு கொடுக்கப்படும் செயல் வடிவமாகும்.
இந்த செயல் வடிவம் கொடுக்கப்படா விட்டாலும் ''வணக்கம்'' என்ற சொல் வணங்குதாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பரஸ்பரம் வணக்கம் என்று செல்லிக் கொள்பவர்கள் நாங்கள் வாயளவில் வணக்கம் சொல்லுகிறோம் ஆனாலும் உள்ளத்தால் அவரை வணங்குவதில்லை என்றும் சிலர் சப்பைக் கட்டுவார்கள். அப்பவும் இது வெட்டிச் சொல் ஆகிவிடும். இதுவும் அபத்தமானது.
''ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? 

நீங்கள் செய்யாததைக் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.'' (அல்குர்ஆன் 61:2, 3)


வணக்கத்திற்குரிவன் இறைவனைத் தவிர வேறு எவரும் இல்லை என்றக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் எவரும் பிறருக்கு வணக்கம் சொல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்ல தமிழில் எவ்வளவோ வாசகங்கள் உள்ளன. ''உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்'' ''வளமுடன் வாழுங்கள்'' ''நலம் பெறுங்கள்'' என எல்லோருக்கும் அவசியமான இது போன்ற வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: